Thalapathy 68: 'தளபதி 68' பட பூஜையில் செம்ம ஸ்டைலிஷாக டீ-ஷர்ட்டில் கலந்து கொண்ட விஜய்! வெளியானது வீடியோ!
தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட, படு வைரலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

'பிகில்' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய்யின் அடுத்த படமான, அவரது 68-ஆவது படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பூஜை கடந்த செப்டம்பர் மாதம், மிக பிரமாண்டமாக போடப்பட்ட நிலையில், 'லியோ' ரிலீசுக்கு முன்பே படப்பிடிப்பும் துவங்கியது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வருகிறார். படக்குழு 'லியோ' ரிலீசுக்கு பின்னரே தளபதி 68 படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள், உள்ளிட்ட அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால் லியோ படம் வெளியான பின்னரும், படம் குறித்த விவரங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து 'தளபதி 68' படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று மதியம், தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ வெளியாகும் என அறிவித்தார்.
இந்நிலையில் சற்று முன்னர் விஜயதசமியை முன்னிட்டு 'தளபதி 68' படத்தின் பூஜை வீடியோ வெளியாகி, இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் - நடிகைகள் பற்றிய விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, தளபதி ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. தளபதி 68 படத்தை, வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும் தளபதி 68 படத்தின் பூஜையில் மிகவும் ஸ்டைலிஷாக டீ-ஷர்ட்டில் கலந்து கொண்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த தகவல் வெளியாகி, தற்போது படம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. மேலும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான லோகேஷ் கனகராஜின், லியோ படமும், இந்தியா மற்றும் உலக அளவில் வசூலில் தொடர்ந்து மாஸ் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D