அவர் சிரிப்பே ஒரு தனி அழகு.. யோகி பாபு வீட்டு விசேஷத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த கங்குவா - வைரலாகும் போட்டோஸ்!
Yogi Babu Daughter : தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக விளங்கிவரும் யோகி பாபுவின் வீட்டு விசேஷத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
Birthday Party
பிரபல நடிகர் யோகி பாபுவின் மகள் பரணி கார்த்திகாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டு குழந்தை பரணி கார்த்திகாவை வாழ்த்தினார்.
Birthday Celebration
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஷால் உள்ளிட்ட பலர் நடிகர்கள் யோகி பாபுவின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், பிரபல நடிகர் சூர்யா அவர்களும் மாசான என்ட்ரி கொடுத்து குழந்தை பரணி கார்த்திகாவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Yogi Babu Daughter
தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் யோகி பாபு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக அட்லீ அவர்களுடைய ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் அவர் நாயகனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் – இந்த கிரகத்தில் எளிமையான மனிதர் – ரஜினியை சந்தித்த இர்பான் பதான்!