மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் – இந்த கிரகத்தில் எளிமையான மனிதர் – ரஜினியை சந்தித்த இர்பான் பதான்!
சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்த இர்பான் பதான் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 13ஆவது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 22ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் 282 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தது.
10 மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிராக முதல் வெற்றியை பெற்ற கொண்டாட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஈடுபட்ட நிலையில், ரஷீத் கான் உடன் இர்பான் பதான் டான்ஸ் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் வர்ணனையாளரான பதான், மைதானத்திலேயே ரஷீத் கானுடன் உற்சாகமாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உலகக் கோப்பை 2023 போட்டிகளுக்காக இந்தியாவின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதால், வீரர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்பட நட்சத்திரங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான இர்பான் பதான் சென்னை விமான நிலையத்தில் மெகாஸ்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பேருந்தில் சென்று கொண்டிருந்த போது லுங்கி டான்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள்!
அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு நம் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ஆனால் இந்த கிரகத்தில் எளிமையான மனிதர். அவரை சந்தித்தது ஒரு சிறந்த கற்றல். #தலைவர் #மகிழ்ச்சி," என்று பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வந்த ஜெயிலர் படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வரையில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தலைவர்170 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று விஜயதசமியை முன்னிட்டு ரஜினிகாந்த் சென்னை வந்துள்ளார். அப்போது தான் இர்பான் பதான் அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.