ஹாங்சோவில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது. தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.

South Africa vs Bangladesh: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் – டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!

இந்த நிலையில் 2ஆம் நாளான இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட ருத்ரன்ஷ் கண்டேல்வாலுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலமாக அவர் 2 பதக்கங்கள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த கலப்பு 50 மீ பிஸ்டல் SH1 பிரிவில் ருத்ரன்ஷ் கண்டேல்வால் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

பேருந்தில் சென்று கொண்டிருந்த போது லுங்கி டான்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள்!

இதே போன்று இன்று காலையில் நடந்த பெண்களுக்கான 400 மீ தடகளப் போட்டியில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி 400 மீ T20 பிரிவில் இந்தியாவிற்கு 8ஆவது தங்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார். மற்றொரு போட்டியில் பெண்களுக்கான 100 மீ T12 பிரிவில் இந்தியாவின் சிம்ரன் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதே போன்று ஆண்களுக்கான 400 மீ T64 பிரிவில் அஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான ஷாட்புட் F40 பிரிவில் இந்தியாவின் ரவி ரோங்காலி 9.92 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

Scroll to load tweet…

கேனோ (படகுப் போட்டி) KL 2 பிரிவில் இந்தியாவின் பிராச்சி யாதவ் பந்தய தூரத்தை 54.962 நிமிடங்களில் கடந்து தங்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த பெண்களுக்கான படகு போட்டி VL2 பிரிவில் பிராச்சி யாதவ் போட்டி தூரத்தை 1:03.47 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஆண்களுக்கான கேனோவின் KL 3 பிரிவில் இந்தியாவின் கவுரவ் மனீஷ் பந்தய தூரத்தை 44.605 நிமிடங்களில் கடந்து வெண்கலம் வென்றார். மற்றொரு போட்டியில் கேனோவின் VL2 பிரிவில் கஜேந்திர சிங் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.

Australia vs New Zealand, Dalai Lama: திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை சந்தித்த நியூசிலாந்து அண்ட் டீம்!

பெண்களுக்கான கிளப் எறிதல் போட்டியில் இந்தியாவின் ஏக்தா பயான் F32/51 என்ற பிரிவில் 21.66 மீ தூரம் வரையில் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக நேற்று நடந்த 5000 மீ தடகள போட்டியில் அங்கூர் தாமா தங்க பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் T64 பிரிவில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.02 மீ தாண்டி தங்கம் கைப்பற்றினார். மற்றொரு வீரர் 1.95 மீ தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான ஜூடோ பிரிவில் இந்தியாவின் கபில் பர்மெர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

400 மீ தடகளப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி தங்கம் கைப்பற்றி சாதனை – ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்!

இதற்கு முன்னதாக நடந்த பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் SH1 பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அவானி லேகராவுக்கு தங்கம் வென்றுள்ளார். மேலும், கலப்பு 50 மீ பிஸ்டல் SH1 பிரிவில் இந்தியாவி ருத்ரன்ஷ் கண்டேல்வால் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

இதே போன்று ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் இந்திய வீரர் நிஷாத் குமார் சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். நிஷாத் 2.02 தூரம் வரையில் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஹாங்ஜீ சென் 1.94 மீ தாண்டி வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் ராம் பால் 1.94 மீ உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.

மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான ஷாட்புட் F11 பிரிவில் இந்தியாவின் மோனு கஙகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னதாக நடந்த உயரம் தாண்டுதல் T63 பிரிவில் இந்தியாவின் சார்பில் சைலேஷ் குமார், மாரியப்பன் தங்கவேல் மற்றும் ராம் சிங் பதியார் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர். இதே போன்று பெண்களுக்கான படகு போட்டி VL2 பிரிவில் பிரச்சி யாதவ் போட்டி தூரத்தை 1:03.47 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

Scroll to load tweet…

இதே போன்று F51 கிளப் எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட பிரணவ் சூர்யகுமார் தங்கம் வென்றார். மேலும், தராம்பீர் வெள்ளிப் பதக்கமும், அமித் குமார் சரோஹா வெண்கலப் பதக்கமும் கைப்பற்றியுள்ளனர். தற்போது வரையில் இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என்று மொத்தமாக 15 பதக்கங்கள் வென்றுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரையில் சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 107 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.