“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்குமார், கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. மீண்டும் ஷூட்டிங் ஐதராபாத்திற்கே மாறியது. 

கிட்டத்தட்ட படத்தின் அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழு சுவிட்சர்லாந்து செல்வதாக தகவல்கள் வெளியாகின. அப்போது தான் கொரோனா பிரச்சனை உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. அதனால் வெளிநாடு செல்லும் ஐடியாவை தவிர்த்த படக்குழுவினர் ராமோஜி ராவ் ஸ்டூடியோவிலேயே ஷூட்டிங்கை தொடர்ந்து வந்தனர். 

இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!

அப்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் அதிகமாக கூட தடை விதிக்கப்பட்டது. தனிமனித விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சினிமா, சீரியல், வெப் தொடர்கள் என அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்று வந்த ஷூட்டிங்குகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன. 

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

அப்படி திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தல அஜித், ஐதராபாத்தில் வலிமை பட ஷூட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக அதிரடி முடிவெடுத்த அஜித் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக்கில் புறப்பட திட்டமிட்டுள்ளார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தை பிரிந்திருக்க விரும்பாத அஜித், 600 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கிலேயே பயணிந்து வீடு வந்து சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அஜித்தின் நெருங்கிய வட்டாரங்களே அஜித்திற்கு ரேஸின் போதுமே பைக் ஓட்ட பிடிக்கும், இப்படி பொது சாலையில் பைக் ஓட்டமாட்டார் என்று குண்டை தூக்கி போடுகின்றனர்.