ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...!
இப்படி அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஜி.வி.பிரகாஷ் அப்பாவான சந்தோஷத்தில் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். பள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 2013ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி நேற்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை கேள்விப்பட்ட திரைப்பிரபலங்கள் பலரும் சைந்தவி - ஜி.வி.பிரகாஷ் தம்பதிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு சைந்தவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சைந்தவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு செல்ஃபி... மோசமான உடையில் பிரபல நடிகை கொடுத்த கன்றாவி போஸ்...!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான “வெய்யோன் சில்லி”, ”மண் உருண்டை” ஆகிய பாடங்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பிசி ஹீரோவான ஜி.வி.பிரகாஷ் வருஷம் முழுவதும் ஏகப்பட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...!
இப்படி அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஜி.வி.பிரகாஷ் அப்பாவான சந்தோஷத்தில் இருக்கிறார். கணவர் உடைய இசையில் பல படங்களில் பாடியுள்ள சைந்தவி, இறுதியாக ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த அசுரன் படத்தில் எல்லு வய பூக்களையே பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.