தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் தல அஜித்திற்கு மே 1ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது. ரசிகர்கள் மன்றத்தை கலைத்துவிட்டாலும், தல அஜித் மீது பாசத்தை பொழியும்  ஃபேன்ஸ் கூட்டத்திற்கு சற்றும் குறைவில்லை. தனது சினிமா சம்பந்தமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, எந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என்றாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்தவிதமான சோசியல் மீடியாவிலும் அஜித்திற்கு கணக்கு கிடையாது. ஆனால் அவரைப் பற்றிய சின்ன தகவல்கள் கூட அவரது ரசிகர்கள் உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படி அளவு கடந்த பாசம் வைத்துள்ள தல ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?... மாஸ் காட்ட மரண வெயிட்டிங்கில் இருந்தனர். 

இதையும் படிங்க: துளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...!

மே 1ம் தேதி அன்று தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, அருண் விஜய், ஆதவ் கண்ணதாசன், ரைசா, சாந்தனு உள்ளிட்ட 14 பிரபலங்களை கொண்டு ஸ்பெஷல் டி.பி. ஒன்றை வெளியிட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.அந்த தகவல்கள் மட்டுமில்லாது அஜித் பிறந்தநாள் தொடர்பாக விதவிதமான ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது. இந்த நிலையில் அஜித் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக வந்த அதிரடி அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தட்டித்தூக்க பக்கா பிளான்... பெண்களுக்கு “திரெளபதி” இயக்குநர் வைத்த கோரிக்கை...!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சாந்தனு, தல அஜித் அலுவலகத்தில் போன் வந்தது. அவரது பிறந்த நாளுக்கு எந்த பொது முகப்பு படங்களையும் சமூக வலைதளங்களில் வைக்கவேண்டாம் என்றும், கொரோனா காலத்தின்போது எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்றும் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறியுள்ளார். அவரது கோரிக்கையை நான் மதிக்கிறேன், எல்லார் மனதிலும் நிறைந்த ஜென்டில்மேன் அவர், அவரை பிறந்தநாள் அன்று வாழ்த்துவோம்... தனிப்பட்ட முறையில் கொண்டாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.