தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், அவருக்கு யாரையாவது மிகவும் பிடித்துவிட்டால், அவர்களுக்கு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை வழங்குவாராம்.

Ajith's Expensive Gift: S.J. Surya's Video Going Viral! கோலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கலக்கி வருகிறார். இந்த ஆண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதில் குட் பேட் அக்லி மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

இதுதவிர இந்த ஆண்டு அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கினார். முதலாவதாக துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். அதில் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. பின்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற கார் ரேஸில் களமிறங்கிய அஜித், இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இதுமட்டுமின்றி இந்த ஆண்டு நடிகர் அஜித் குமார் பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் குடியரசு தலைவர் கையால் அந்த பெருமைமிகு விருதை பெற்றுக் கொண்டார் அஜித்.

அஜித் பற்றி எஸ்.ஜே.சூர்யா சொன்ன ஆச்சர்ய தகவல்

இப்படி அஜித்துக்கு இந்த ஆண்டு தொட்டதெல்லாம் தங்கமாக இருக்கிறது. இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் பற்றி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா பேசிய பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித், தனக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுக்கு அவர் காஸ்ட்லி கிஃப்ட் பரிசளிப்பார் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

அந்த வகையில் தான் அஜித்திடம் வாலி பட கதை சொன்னபோது அது அவருக்கு பிடித்துப்போனதால் தனக்கு பைக்கை பரிசாக அளித்ததாக கூறிய எஸ்.ஜே.சூர்யா, அதேபோல் வாலி படத்தின் பர்ஸ்ட் காபி பார்த்துவிட்டு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டதாகவும், இப்படி தனக்கு பிடித்துவிட்டால் அது எவ்வளவு விலையாக இருந்தாலும் பட்டு பட்டுனு வாங்கி கொடுத்து விடுவார் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.

வாலி திரைப்படம் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒன்று ஹீரோ மற்றொன்று வில்லன். அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். நடிகர் அஜித்தின் கெரியரை தூக்கி நிறுத்திய படங்களில் வாலியும் ஒன்று. அதனால் தான் அப்படம் காலம் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.