பிரபல காமெடி நடிகர் அல்லு ரமேஷ், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம்... தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

52 வயதாகும் நகைச்சுவை நடிகர், அல்லு ரமேஷிற்கு கடந்த திங்கள்கிழமை திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் உள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை மாலை உயிரிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவரது மரணம் தெலுங்கு திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அல்லு ரமேஷ் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான, நெப்போலியன்' மற்றும் 'தொழுபொம்மலதா' போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

வெளியாகும் முன்பே கெத்து காட்டும் பிரபாஸின் 'ஆதிபுருஷ்'! டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது!

அல்லு ரமேஷ் கடந்த 2001 ஆம் ஆண்டு, தெலுங்கு இயக்குனர் ஸ்ரீராம் பாலாஜியின் இயக்கத்தில் 'சிறுஜல்லு' என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் தருண் குமார், எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் ரிச்சா பல்லோடு போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். முதல் படத்திலேயே இவரது காமெடி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து 'மதுரா ஒயின்கள்', 'வீதி', 'தொலு பொம்மலதா', 'ராவண தேசம்' போன்ற பல படங்களில் நடித்தார்.

முன்னழகையும்... பின்னழகையும் மிடுக்காக காட்டும் கிக்கான அவுட் ஃபிட்டில்..! ரசிகர்களை மிரள வைத்த சமந்தா! போட்டோ

இந்நிலையில் இவரின் திடீர் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலமாக தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருவதோடு, சிலர் நேரடியாகவும் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் இவரின் இறுதி சடங்குகள் இன்று அவருடைய சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது