உதயநிதியின் கலகத் தலைவன் எப்படி இருக்கு?.. அமைச்சரிடம் ரிவ்யூ கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் - வைரலாகும் வீடியோ
அமைச்சரிடம் கலகத் தலைவன் படத்தை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிவ்யூ கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். அதேபோல் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் தான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கலகத் தலைவன் திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. வித்தியாசமான திரில்லர் படமாக இருப்பதாக கலகத் தலைவன் படத்துக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!
கலகத் தலைவன் படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் தமிழக முதல்வர், உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சேர்ந்து இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் அருமையாக இருப்பதாக இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் உதயநிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து படம் வெற்றி பெற வாழ்த்தி இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி செய்யும் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு அவர் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்கிறார். அமைச்சரிடம் கலகத் தலைவன் படத்தை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிவ்யூ கேட்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... காதல் மனைவி ஷாலினியின் பிறந்தநாளை அமர்களமாக கொண்டாடிய அஜித் - வைரலாகும் பர்த்டே போட்டோஸ்