MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!

குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்துவிட்ட போதும் தற்போது இவர் கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : Ganesh A
Published : Nov 21 2022, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள நடிகையான நயன்தாரா, கடந்த 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், அடுத்ததாக ரஜினியுடன் சந்திரமுகி, விஜய்யுடன் சிவகாசி, அஜித்துடன் பில்லா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

முதலில் கமர்ஷியல் படங்களில் மட்டும் ஆர்வம் காட்டி வந்த நயன்தாரா, பின்னர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த அறம், மாயா, டோரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால் ஹீரோக்களுக்கு இணையான வரவேற்பு இவரது படங்களுக்கும் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் லேடி சூப்பர்ஸ்டாராகவும் உயர்ந்தார்.

இதையும் படியுங்கள்... ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவு.. ஃபேன்ஸிடம் நடிகர் விஜய் சொன்ன அந்த முக்கியமான 2 விஷயம் என்ன?- முழு விவரம் இதோ

34

பொதுவாக ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டாலே பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிடும், அதுவும் குழந்தை பிறந்துவிட்டால் அவருக்கு அக்கா, அம்மா போன்ற ரோல்கள் கொடுத்து ஒதுக்கிவிடுவார்கள். இப்படி தான் பல முன்னணி ஹீரோயின்களுக்கு நடந்துள்ளது. ஆனால் நயன்தாரா, அந்த விஷயத்தில் சற்று வித்தியாசமானவராக இருக்கிறார்.

44

நயன்தாராவுக்கு கல்யாணமாகி, குழந்தை பிறந்துவிட்ட போதும் தற்போது இவர் கைவசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா தற்போது அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள கோல்டு, அஸ்வின் சரவணனின் கனெக்ட், அட்லீ இயக்கும் ஜவான், அஹமத் இயக்கியுள்ள இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம், மலையாள நடிகர் நிவின் பாலி உடன் ஒரு படம், துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படம் என மொத்தமாக கைவசம் 7 படங்களை வைத்திருக்கிறார் நயன்.

இதையும் படியுங்கள்... 2 முறை கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை... மாரடைப்பால் பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved