2 முறை கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை... மாரடைப்பால் பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்
இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பிரபல நடிகை தற்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா காலமானார். அவருக்கு வயது 24, கடந்த 20 நாட்களாக ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் சுமார் 12:59 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்றிரவு அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் CPR கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்காததால் அவர் இன்று உயிரிழந்தார்.
நடிகை ஆண்ட்ரிலா சர்மா கடந்த நவம்பர் 1 ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்குள் இரத்தக்கசிவு இருப்பதைக் கண்டறிந்தனர், இதன் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படியுங்கள்... வாரிசுக்கு முட்டுக்கட்டை போடும் தெலுங்கு திரையுலகம்... தலையிடுமா ரெட் ஜெயண்ட்ஸ்? - உதயநிதி ஓபன் டாக்
நடிகை ஆண்ட்ரிலா சர்மா ஏற்கனவே இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் ஆவார். அதேபோல் இந்த முறையும் கோமா நிலையில் இருந்து அவர் மீண்டு வந்துவிடுவார் என குடும்பத்தினரும், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதிர்பார்ப்பெல்லாம் வீணாய் போனது.
24 வயதில் நடிகை ஆண்ட்ரிலா சர்மா, மரணமடைந்தது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவால் மனமுடைந்து போன ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... தளபதி 67-னும் LCU படம் தானாம் - மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நடிகர்... குஷியான விஜய் ரசிகர்கள்