ரசிகர்களுடனான சந்திப்பு நிறைவு.. ஃபேன்ஸிடம் நடிகர் விஜய் சொன்ன அந்த முக்கியமான 2 விஷயம் என்ன?- முழு விவரம் இதோ
நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதோடு அவர்களிடன் 2 முக்கியமான விஷயங்களையும் கூறி உள்ளார்.
பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் இன்று ரசிகர்கள் சந்திப்புக்கு ஏற்பாடி செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இன்று காலையில் இருந்தே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க குவிந்தனர். அவர்களுக்காக கம கமவென பிரியாணியை தயார் செய்து சர்ப்ரைஸ் விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார் நடிகர் விஜய்.
தன்னை காண வந்த ரசிகர்களை தனக்காக காத்திருக்க வைக்காமல் முதலில் சாப்பிடச் சொன்ன விஜய், அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர் பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு இன்னோவா காரில் வந்தார். வெள்ளை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் என மாடர்ன் அரசியல்வாதி போல் வந்திறங்கிய விஜய்க்கு அங்கு இருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்தவாரு அலுவலகத்திற்குள் சென்ற விஜய் அங்கிருந்து தனது ரசிகர்கள் ஒவ்வொருவராக் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி அவர்களுக்கு இரண்டு முக்கியமான விஷயங்களையும் சொல்லியுள்ளார்.
இதையும் படியுங்கள்... ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்... டுவிட்டரில் டிரெண்டாகும் பனையூர் பிரியாணி
அது என்னவென்றால், முதலில் குடும்பத்தினரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிய விஜய், தயவுசெய்து இனிமேல் தனது பேனருக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாராம். மொத்தமாக இரண்டு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டாராம் விஜய்.
இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய விஜய், வெளியே தன்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். இடையே ரஞ்சிதமே பாடல் காட்சியில் வரும் ஸ்டெப் ஒன்றையும் போட்டு அங்கு கூடியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்திய தளபதி, காரில் கிளம்பி தன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையும் படியுங்கள்... கோவில் கட்டிக்கொடுத்த தளபதி! குழந்தைகளுக்கு விஜய் பட பெயர்களை வைக்கும் மக்கள்- தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?