காதல் மனைவி ஷாலினியின் பிறந்தநாளை அமர்களமாக கொண்டாடிய அஜித் - வைரலாகும் பர்த்டே போட்டோஸ்
நடிகை ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோலிவுட்டில் ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் கடந்த 2000-ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அமர்களம் படத்தில் ஜோடியாக நடித்தபோது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்தால் ஷாலினியின் கையில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட, அப்போது ஷாலினி மீது அஜித் காட்டிய அக்கறை நாளடைவில் காதலாக மாறியது.
இவர்கள் இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு குட் பாய் சொல்லிவிட்ட ஷாலினி, அதன்பின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் பொன்னியின் செல்வன் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது.
இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த ஷாலினி அஜித்! எந்த படத்தில் தெரியுமா?
ஆனால் அதெல்லாம் வதந்தி என்பது அப்படத்தின் ரிலீஸ் மூலம் உறுதி ஆனது. திருமணமாகி 22 ஆண்டுகள் ஆன போதிலும் அதே காதலுடன் இருக்கும் அஜித் - ஷாலினி ஜோடியின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. அந்த வகையில் நேற்று நடிகை ஷாலினியின் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
சோபாவில் அமர்ந்திருக்கும் ஷாலினி அருகே அஜித் நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வரும் ரசிகர்கள், இருவரும் செம்ம ஜோடி என புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்து, அப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த பின்னும் குறையாத மவுசு... கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா - கைவசம் இத்தனை படங்களா..!