ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த ஷாலினி அஜித்! எந்த படத்தில் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துகிக்கு தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை, ஷாலினி ஒரு சில காரணங்களால் ஏற்கவில்லையாம். இந்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், 'படையப்பா'.
சிவாஜி கணேசன், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் தந்தையாகவும், லட்சுமி தாயாகவும் நடித்திருப்பார். சௌந்தர்யா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் ப்ரீத்தா, அப்பாஸ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மற்றொரு கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணா நடித்திருந்தார். தான் காதலித்தவர் கிடைக்காததால், வில்லியாக மாறி நீலாம்பரியாக இவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் பாராட்டுகளை பெற்றது.
இந்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிகை சித்தாரா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனாது நடிகை ஷாலினி தானாம்.
அப்போது அமர்க்களம், உள்ளிட்ட சில படத்தில் பிசியாக நடித்து வந்ததால்... இந்த படத்தின் வாய்ப்பை அவர் ஏற்க வில்லை என கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.