பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான நிகழ்ச்சி 'எங்க வீட்டு மாப்பிள்ளை' இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பிரபல நடிகரான ஆர்யாவை மைய்யமாக வைத்தே எடுக்கப்பட்ட நிகழ்ச்சி என்பது அனைவரும் அறிந்தது தான். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு பிடித்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறினார் ஆர்யா. எப்படியும் இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு திருமணம் ஆகிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தான் குழப்பமான மனநிலையில் இருப்பதால் தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்பது போல் கூறி எதிர்பாராத ஒரு திருப்பு முனையில் கொண்டுவந்து இந்த நிகழ்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஆர்யா.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகள் கலந்துக்கொண்ட இலங்கை பெண் சுசானா, முதல் முறையாக இந்த நிகழ்ச்சி குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 

"இது குறித்து அவர் கூறுகையில்... முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன்... இப்போது உங்களுடைய அன்பை பெற்றுள்ளேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. கடந்த 3 மாதம் ஆர்யாவுகாக நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் நாசமாகி உள்ளது. ஆனால் இதிலிருந்து வெளிவந்து அடுத்த வேலையை பார்ப்பது நல்லது என நினைக்கிறன். உங்களுடைய பொறுமைக்கு நன்றி... கன்னடாவை மிஸ் செய்கிறேன் என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.