கங்குவா படத்தின் மொத்த பட்ஜெட் என்ன?.. படத்தில் இணையும் ஒரு புதிய பிரபலம் - Interesting தகவல்கள் இதோ!
சூர்யாவின் கங்குவா திரைப்படத்திலிருந்து, அவருடைய பிறந்தநாள் அன்று வெளியான வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.
குறிப்பாக அந்த வீடியோவில் வரும் எஸ்.ஜே சூர்யா அவர்களுடைய குரலில் இடம்பெற்ற வசனங்களும், இறுதியில் சூர்யா "நலமா" என்று கேட்கும் வசனமும் அவருடைய ரசிகர்களால் பெரிய அளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவர் தனஞ்ஜெயன், கங்குவா குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசும்பொழுது "இந்த படத்தின் பட்ஜெட்டை நாங்கள் இன்னும் முழுமையாக முடிவு செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.
வெறித்தனம்... கையில் கோடாரியோடு தனுஷ்! புதிய போஸ்டருடன் வெளியான 'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் தேதி!
"மேலும் சுமார் 200 கோடி ரூபாயிலிருந்து 250 கோடி ரூபாய் வரை இந்த படத்திற்காக செலவிடப்பட உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். "மொத்தம் இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில், CG காட்சிகள் மட்டும் சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் இருக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறிய தனஞ்செயன், இன்னும் 40 நாளுக்கான படபிடிப்பு பணிகள் மீதம் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் கூடுதல் சிறப்பாக பாலிவுட்டின் முன்னணி நடிகர் பாபி தியோல் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.
கங்குவா-வின் 3டி தொழில்நுட்பத்திற்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் செலவீட்டப்பட்டுள்ளது என்றும், ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் 20 நிமிடங்கள் மட்டுமே தோன்றினார், ஆனால் இந்த திரைப்படத்தில் கங்குவா படம் முழுக்க தோன்றி உங்களை அசரடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சில கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கி நவம்பரில் முடிவடையும் என்றும். 2024ம் ஆண்டின் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் பல அசத்தல் தகவல்களை கொடுத்து சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?