- Home
- Cinema
- ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட யோகி பாபுவின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபுவின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், இன்று முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு தான், இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பதை அவரே சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதே போல் இவரின் தோற்றத்தை வைத்து பலர் கிண்டல் செய்த நிலையில், நாளடைவில் அதுவே அவருக்கு மிகப்பெரிய பிளஸ்சாக மாறி, முன்னணி காமெடி நடிகராக இவரை உயர்த்தியது என்பது மறுக்க முடியாத உண்மை.
யோகி பாபு, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்கிற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் இயக்குனர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில், கடந்த 2009 ஆம் ஆண்டு அமீர் நடித்த, 'யோகி' படத்தில் சிறிய காமெடி ரோலில் நடித்து... அனைவராலும் கவனிக்கப்பட்டதால், நாளடைவில், யோகி பாபு என்பதே அவரின் பெயராகவும் மாறி போனது.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில், சிறிய சிறிய காமெடி வேடத்தில் நடித்த இவருக்கு... திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால், 'யாமிருக்க பயமேன்' படத்தில் இடம்பெற்ற 'பண்ணி மூஞ்சி வாயா' காமெடி தான். இதை தொடர்ந்து அடுத்தடுத்து, விஜய், அஜித், ரஜினிகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி ரோலில் நடித்து அசத்தினார்.
இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடிக்க துவங்கினார். சமீபத்தில் கூட இவர் கதையின் நாயகனாக நடித்த பொம்மை நாயகி என்கிற திரைப்படம் ரிலீசாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. ஷான் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்த இப்படத்தை பா.இரஞ்சித் தான் தயாரித்து இருந்தார். இதையடுத்து டஜன் கணக்கான படங்களை கைவசம் வைத்து, செம்ம பிசியாக நடித்து வருகிறார் யோகிபாபு.
முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி தொடர்! புதிய தொடர் என்ன தெரியுமா?
படு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால், 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம். காமெடியனாக நடிக்க 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெருகிறாராம். இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒரு வீடு மற்றும் இரண்டு கார்கள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சொந்த ஊரான ஆரணியில் இவருக்கு சில வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளன.
ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ள இவர், சொந்த ஊரில் தன்னுடைய ஊர் மக்களுக்காக கோவில் ஒன்றையும் கட்டி கொடுத்துள்ளார். அதே போல் தன்னிடம் உதவி என வருபவர்களுக்கு, உதவும் மனம்கொண்டவர். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 40 கோடி முதல் 70 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான எந்த ஒரு அதிகார பூர்வ ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.