வெறித்தனம்... கையில் கோடாரியோடு தனுஷ்! புதிய போஸ்டருடன் வெளியான 'கேப்டன் மில்லர்' டீசர் ரிலீஸ் தேதி!
நடிகர் தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின், டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ், மாறுபட்ட கதை களத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 3 பாகங்களாக இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பான பீரியாடிக் கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
முதல் பாகம் 1940களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர் படக்குழுவினர்.
முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி தொடர்! புதிய தொடர் என்ன தெரியுமா?
இந்த படத்தில் முதல் முறையாக நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அதைப்போல் முக்கிய கதாபாத்திரத்தில, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டீசர் குறித்த அப்டேட் தான் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. டீசர் வெளியாகும் நேரம் குறித்த தகவல் வெளியாகாத நிலையில், அது குறித்த அப்டேட் தனியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளதால், தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.