இட்ஸ் 'கங்குவா' மோட்! கட்டுமஸ்தாக உடலை மாற்றி... மிரள வைத்த சூர்யா! வைரலாகும் ஒர்கவுட் வீடியோ!
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' படத்திற்காக வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து, கட்டு மஸ்தான உடற்கட்டுக்கு மாறி உள்ள மாஸ் வீடியோ ஒன்றை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
தொடர்ந்து தரமான கதைகளையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா, தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தை 'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களின் ஒருவரான சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கும் இந்த படம், ஒரு ஃபேண்டஸி கதையம்சம் கொண்ட பீரியாடிக் ஃபிலிமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்ப படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் கொடைக்கானல் பகுதியில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் சூர்யா தன்னுடைய மனைவியுடன் கொடைக்கானலுக்கு வந்துள்ளார்.நேற்றைய தினம் சூர்யா தன்னுடைய மனைவியுடன், சில ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதில் சூர்யா சற்று குண்டாக இருப்பதாகவும் சில விமர்சனங்கள் வெளியானது.
மேலும் சூர்யா வரலாற்று பாகத்திற்காக தன்னுடைய உடலமைப்பை சற்று குண்டாக மாற்றி உள்ளதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் சூர்யா கட்டு மஸ்தான உடல்கட்டோடு, வெறித்தனமான தோற்றத்தில் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தாறுமாறாக ஷார் செய்து வருகிறார்கள்.
அஜித் இதுவரை எங்கெல்லாம் பைக் ரெய்டு செய்துள்ளார்? விலாவாரியாக மேப் போட்டு கட்டிய மேலாளர்!
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்பே சுமார் 500 கோடி பிசினஸுக்கு பிசினஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்து வருகிறார். வரும் இந்த பத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பழனிச்சாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்கிறார். மதன் கார்க்கி வசனத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.