துணை நடிகையை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், அத்து மீறி நுழைந்து 4 பேர் கொண்ட கும்மல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க பல திட்டங்களை வகுத்து காவ துறை துடிப்புடன் அதனை செயல்படுத்தி வந்தாலும், சில வக்கிர புத்தி கொண்டவர்கள்... எல்லை மீறிய கொடுமைகளில் ஈடுபட்டு கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில், துணை நடிகை ஒருவரை 4 பேர் கொண்ட கும்மல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தே நிமிடம் கதையை கேட்டுட்டு... பர்சில் இருந்த 3500 ரூபாய் பணத்தை இயக்குனரிடம் கொடுத்து ஓகே சொன்ன நயன்தாரா!

ஆதாவது ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை, (ரேஷ்மா) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கிருந்த படியே நடித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார் ரேஷ்மா.

Nayanthara: இயற்கையை ரசித்தபடி.. குழந்தையை மார்பில் அணைத்து கொண்டு குட்டி தூக்கம் போடும் நயன்! போட்டோஸ்

இந்நிலையில் மே 28-ஆம் தேதி, ரேஷ்மாவின் உறவினர்கள் அனைவரும் வெளியூருக்கு சென்ற தகவலை அறிந்த 4 பேர் கொண்ட கும்மல், நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவரின் வாயை பொத்தி, அடித்து துன்புறுத்தி அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பான புகாரில் நடிகர் ரமணாவின் கார் ஓட்டுநர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.