Nayanthara: இயற்கையை ரசித்தபடி.. குழந்தையை மார்பில் அணைத்து கொண்டு குட்டி தூக்கம் போடும் நயன்! போட்டோஸ்
நடிகை நயன்தாரா வெக்கேஷனை கழிப்பதற்காக ஹான்காங் சென்றுள்ள நிலையில், அங்கு நயன்தாரா குழந்தையை மார்பில் போட்டு கொண்டு குட்டி தூக்கம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Nayanthara Vacation Photos
மயலயால திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் தான் நடிகை நயன்தாரா. 2003-ஆம் ஆண்டு Manassinakkare என்கிற மலையாள படத்தில் அறிமுகமான நயன்தாரா, 2005-ஆம் ஆண்டு வெளியான 'ஐயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சந்திரமுகி', சூர்யாவுடன் கஜினி, எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக கள்வனின் காதலி, ஜீவாவுக்கு ஜோடியாக ஈ, சிம்புவுக்கு ஜோடியாக வல்லவன் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
Nayanthara Vacation Photos
ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த நடிகை நயன்தாரா திரையுலக வாழ்க்கையில், முதல் காதல் சர்ச்சை உருவானது சிம்புவுடன் இணைந்து 'வல்லவன்' படத்தில் நடித்த பிறகு தான். மிகவும் நெருக்கம் காட்டிய இந்த ஜோடி வெளிநாடுகளுக்கு டேட்டிங் எல்லாம் சென்று காதலை வளர்த்த நிலையில், இருவரின் முத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வந்த பிரச்சனை தான் நயன் - சிம்பு பிரேக்கப்புக்கு காரணம் என கூறப்பட்டது.
Tamannaah Bhatia: 'அரண்மனை 4' ஹிந்தி படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க காதலனுடன் வந்த தமன்னா!
Nayanthara Vacation Photos
இதை தொடர்ந்து, இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடிக்கும் போது... பிரபு தேவாவை காதலிக்க துவங்கிய நயன், அவருக்காக மதம் மாறியதாக கூறப்பட்டது. நயனை திருமணம் செய்து கொள்ள முதல் மனைவி ரமதாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பிரபு தேவா, பின்னர் நயன்தாராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார்.
Nayanthara Vacation Photos
பிரபு தேவாவின் பிரிவு நயன்தாராவை மிகப்பெரிய அளவில் பாதித்த நிலையில்... நயன்தாராவின் சினிமா கேரியரும் சரிய துவங்கியது. ராஜா ராணி படத்தின் மூலம் தரமான கம் பேக் கொடுத்த நயன், இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த நானும் ரவுடி தான் படத்தின் போது, அவரை காதலிக்க துவங்கினார். இந்த காதலும் கண்டிப்பாக பிரிந்துவிடும் என பலர் விமர்சித்த நிலையில், ஒருவழியாக 2022-ஆம் ஆண்டு இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது.
Nayanthara Vacation Photos
திருமணம் முடிந்த 4 மாதத்திலேயே, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா...தற்போது நடிப்பு, பிஸ்னஸ், என ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்.. குழந்தைகள் மற்றும் கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரம் ஒதுக்கவும் மறப்பதில்லை. குழந்தைகள் பிறந்த பின்னர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து வந்த நயன், தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஹான்காங் சென்றுள்ளார்.
Nayanthara Vacation Photos
கடந்த சில தினங்களாகவே இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நயன்தாரா, தற்போது தன்னுடைய குசந்தையை மார்பில் படுக்க வைத்து கொண்டு, தட்டி கொடுத்து தூங்க வைக்கும் வீடியோ மற்றும் போட்டோஸ் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.