Asianet News TamilAsianet News Tamil

சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2 படங்களில் அப்டேட் நாளை வெளியாகிறதா? வெளியான செம்ம தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த இரண்டு படங்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் நாளை காலை வெளியாக கூடும் என இப்போதே எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் ரஜினிகாந்தின் ரசிகர்கள்.
 

super star rajinikanth movie announcement released tomorrow
Author
First Published Nov 4, 2022, 11:49 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்த் அடுத்தடுத்து எந்த இயக்குனர் படங்களில் நடிப்பார் என்பது குறித்த தகவல்களும் சமூக வலைத்தளத்தில் கசிந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், ரஜினிகாந்த் தன்னுடைய 170 ஆவது படத்தை, டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இளம் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்திலும்,  வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின்னர் சூப்பர் ஸ்டாருடன் காமெடி வேடத்திலும் நடிக்க உள்ளாராம்.

Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!

super star rajinikanth movie announcement released tomorrow

அதேபோல் நடிகர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர்,  ரஜினியின் மகள் ஐஸ்வர்யா திரைப்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில்... கிரிக்கெட் கதைக்களத்தை மையமாக வைத்து 'லால் சலாம்' என்ற படத்தை அவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக அதர்வா அல்லது விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளாராம் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

பிரியங்கா சோப்ராவை உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட போது நடந்த தில்லுமுல்லு! மிஸ் பார்படாஸ் அழகி குற்றச்சாட்டு!

super star rajinikanth movie announcement released tomorrow

 எனவே நாளை காலை 10:30 மணிக்கு லைக்கா தலைவர் நடிக்க உள்ள இந்த இரு படங்கள் குறித்த அறிவிப்பை தான் வெளியிடும் என இப்போதே, இந்த தகவலை வைரலாக்கி வருகிறார்கள். எனினும் நாளை காலை அந்த எக்ஸைட்மென்ட் தகவல் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Samantha: நோயால் அவதிப்படும் சமந்தா..! மனம் மாறிய நாகசைதன்யா.. மீண்டும் சேர்ந்து வாழ நடக்கிறதா பேச்சுவார்த்தை?

 

Follow Us:
Download App:
  • android
  • ios