சூப்பர் ஸ்டார் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தை பற்றிய தகவல் வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பாண்டியன் ஸ்டார் முல்லைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி..! வைரலாகும் வீடியோ..!
 

அந்த புகைப்படத்தில் ரஜினி தூக்கி வைத்திருப்பது வேறு யாரும் இல்லை, பிரபல பின்னணி பாடகி 'அனுராதா ஸ்ரீராமை தான். தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி மற்றும் கர்னாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பாடியுள்ளார். 

குறிப்பாக ‘கந்தன் கருணை’யில் ‘ஆறுமுகமான பொருள்...’ பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ஒலிக்கும் குரல் அவருடையதுதான். அனுராதா தனது 6வது வயதிலேயே இசைப்பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அந்த சிறு வயதிலேயே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காளி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்: ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து கீதாஞ்சலி செல்வராகவன் எடுத்து கொண்ட "Pregnancy போட்டோ ஷூட்"..!
 

இவர் 1995-ம் ஆண்டு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த மலரோடு மலர் இங்கு" என்ற பாம்பே திரைப்படத்தின் வாயிலாக பிண்ண்னி பாடகியாக அறிமுகமானார். இவர் 'இந்திரா' திரைப்படத்தில் இனி அச்சம் அச்சம் இல்லை என்ற பாடலை முதன்முதலில் தனித்துப்பாடினார். அதன்பிற்கு மின்சார கனவு திரைப்படத்தில் அன்பென்ற மழையிலே பாடல், ஜீன்ஸ் திரைப்படத்தில் அன்பே அன்பே பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.தேவா இசையில் ‘வாலி’ படத்தில் இவர் பாடிய ‘நிலவைக் கொண்டு வா...’ பாடல் மெல்லிசையும் துள்ளலும் கைகோர்த்த இசைக்குரல் வடிவமாக அமைந்தது. ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் பாடிய ‘கறுப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு...’ பாடல், கறுப்பாக இருப்பதை தாழ்வு மனப்பான்மையோடு உணரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பாராட்டையும் நன்றியையும் அனுராதாவுக்கு வாங்கிக் கொடுத்தது.

இன்னும் பல மொழிகளில், பல பாடல்களை பாடி கொண்டு தான் இருக்கிறார். அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். இவர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.

மேலும் செய்திகள்:விஜய் சேதுபதியின் பள்ளி படிக்கும் மகளுக்கு பாலியல் மிரட்டல்! கொடூர மனநிலை கொண்ட ஆசாமியால் எகிறும் கண்டனங்கள்!
 

இந்நிலையில்  'காளி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, காஜா ஷெரிப் மற்றும் அனுராதாவுடன் உள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வளையத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.  

அந்த புகைப்படம் இதோ...