சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம்.. ரிலீஸ் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் - முழு விவரம்!
தனது ஜெயிலர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 170 வது திரைப்பட பணிகளை தற்பொழுது துவங்கியுள்ளார். பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்துவரும் ஒரு மாபெரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இறுதியாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தனது 170வது திரைப்படத்தை சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் தற்பொழுது நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். ஏற்கனவே கேரளாவில் இந்த படத்திற்கான படபிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவர் 170 திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதற்கு இடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கௌரவ வேடம் ஏற்று நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் குறித்த சில தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் கப்பல் தேவ் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லால் சலாம் திரைப்படத்திற்கான தமிழக திரையரங்க வெளியிட்டு உரிமையை பிரபல ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சமந்தாவுக்கு நயன்தாரா அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!