சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தபடியாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி, உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இன்று அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது, பல சுவாரசியமான சம்பவங்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிற மொழி திரைப்படங்களை மேற்கோள்காட்டி, "தமிழ் சினிமா உலகம், தங்களுக்குள் போட்டி பொறாமை என்று எதுவும் இல்லாமல், நல்ல தமிழ் படங்களை பார்த்து அதனை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார் ரஜினிகாந்த். "கேஜிஎப் மற்றும் காந்தாரா படங்களின் மூலம் கன்னட உலகம் வேறு பரிமாணத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்றும். 

காக்கா - கழுகை உதாரணமாக வைத்து குட்டி கதை கூறி... ரசிகர்களை குழம்ப வைத்த சூப்பர் ஸ்டார்!

பாகுபலி, RRR மற்றும் புஷ்பா படங்கள் மூலம் தெலுங்கு திரைப்படங்களும் வேறு ஒரு பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது. தனது மகள் இயக்கத்தில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்கும் "லால் சலாம்" திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, ஜெயிலர் படத்திற்கான பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு, அண்மையில் அவர் மாலத்தீவுக்கு ஓய்வெடுக்க சென்றிருந்தார். 

Scroll to load tweet…

தற்பொழுது அந்த ஓய்வில் இருந்து திரும்பி வந்துள்ள அவர், இன்று ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் மீண்டும் சில தினங்கள் கழித்து, ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில், மீண்டும் ஆவர் இமயமலைக்கு ஓய்வெடுக்க செல்லவிருக்கிறார் என்ற தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. 

இமயமலைக்கு அவர் சென்று திரும்பியதும் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் அவர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார். அந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்திற்கு பிறகு, பல விமர்சனங்களை சந்தித்த நெல்சனுக்கு இது ஒரு கம் பேக் திரைப்படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனுஷ் பிறந்தநாளை பிரமாண்ட முறையில் அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்!