தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட முறையில் அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்!
நடிகர் தனுஷின் 40-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட முறையில், ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர்.
நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 40-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தனுஷின் ரசிகர்கள் சாலிகிராமம் அருணாச்சலம் ரோட்டில் அமைந்துள்ள பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பாக இலவச மதிய உணவு மக்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்நிலையில் இன்று ஜூலை 28 தனுஷ் பிறந்தநாளில் பொதுமக்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேசரி, பூரி ஆகியவை சுமார் 600 பேருக்கு வழங்கினர்.
காக்கா - கழுகை உதாரணமாக வைத்து குட்டி கதை கூறி... ரசிகர்களை குழம்ப வைத்த சூப்பர் ஸ்டார்!
மேலும் மதிய உணவாக 1500 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்திந்திய தலைமை மன்ற தலைவர் சுப்ரமணியம் சிவா கலந்து கொண்டு துவங்கி வைத்தார்.
தனுஷ் ரசிகர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்கள் பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தது மட்டும் இன்றி ஏராளமானோர் வயிறாரா சாப்பிட்டு, மனதார வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு... நெல்சன் வேண்டாம் மாத்துங்கனு சொன்னாங்க - ஓப்பனாக பேசிய சூப்பர்ஸ்டார்