ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் திரைக்கு வந்துள்ள "தர்பார்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு சோலோவாக வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில், தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸ் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. சூப்பர் ஸ்டாரின் மாஸ் எண்டர்டெயின்மென்ட்டை காண ரசிகர்கள் குடும்பம், குடும்பமாக தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க: "தலைவி"யின் செல்வாக்கை ஒரே நாளில் தூக்கி நிறுத்திய தலைவர்... யூ-டியூப் ட்ரெண்டிங்கில் டாப்..!

'ஆதித்யா அருணாச்சலம்' என்ற மும்பை போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது.  முதல் பாதி, இரண்டாம் பாதி என எவ்வித பாகுபாடும் இல்லாமல் படம் சூப்பராக இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே தர்பார் படம் முதல் நாளில் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக லைகா தில்லாக அறிவித்திருந்தது.

ஐசியூ-வில் இருக்கும் சினிமாவிற்கு ஆக்ஸிஜனாக செயல்பட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு வசூலில் மாஸ் காட்டி வருகிறது "தர்பார்" திரைப்படம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளில் ''தர்பார்'' வசூலில் வேற லெவல் மாஸ் காட்டி வருகிறது. கர்நாடாகவில் தற்போது வரை 18 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் வசூல் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கலர் ஃபுல்லான காலண்டர் போட்டோ ஷூட்... இளவரசன், இளவரசியாக ராயல் லுக்கில் கலக்கிய நடிகர், நடிகைகள்...!

ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ள இந்த திரைப்படம் இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன தான் சோசியல் மீடியாவில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து வருகிறார் ரஜினிகாந்த்.