ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயலலிதா பயோபிக் மூவியில் ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கனா ரனாவத்தும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும், சசிகலாவாக பிரியா மணியும் நடித்து வருகின்றனர்.  கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக கெட்டப்பில் உள்ள பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. பார்ப்பதற்கு கொஞ்சமும் ஜெயலலிதா போல் இல்லாத கங்கனாவின் முகம் மற்றும் உடல்வாகு ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். 

படம் வெளியாவதற்கு முன்பே நெகட்டீவ் விமர்சனங்கள் உருவானதால் பயந்து போன படக்குழு, தவறுகளை சரி செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, "தலைவி" படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமியின் 2 கெட்டப்புகள் மற்றும் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். 

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று திடீரென ட்ரெண்டாகும் விஜய் ஹேஷ்டேக்... டுவிட்டரை தெறிக்கவிடும் தளபதி ஃபேன்ஸ்... எதற்காக தெரியுமா?

அரவிந்த் சாமி பார்ப்பதற்கு அச்சு, அசலாக எம்.ஜி.ஆர். போலவே இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர். கங்கனாவின் தோற்றத்தை விட அரவிந்த் சாமியின் தோற்றம் கச்சிதமாக உள்ளதாக கமெண்ட்ஸ்களும், லைக்குகளும் குவிந்தன. இதனால் செம்ம ஹாப்பியில் இருந்த தலைவி படக்குழுவிற்கு மற்றொரு ஹாப்பி நியூஸ் கிடைத்துள்ளது. 

இதையும் படிங்க: காஞ்சிபுரம் போலீசாருடன் 'தல' அஜித்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் புகைப்படங்கள்....!

அதாவது அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். பர்ஸ்ட் லுக் டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் டாப் இடத்தை பிடித்துள்ளது. அரவிந்த் சாமியின் இரண்டு எம்.ஜி.ஆர். லுக்குகளும் சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய நிலையில், டீசரும் செம்ம மாஸ் காட்டி வருகிறது.  எங்க கங்கனா விஷயத்தில் நடந்தது போல் அரவிந்த்சாமி கெட்டப்பும் சொதப்பி விடுமோ என்ற பதற்றத்தில் இருந்த படக்குழு இப்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.