லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். தற்போது சென்னையில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் விஜய் - விஜய் சேதுபதி இருவரிடையேயான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. படத்தை சம்மருக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் படக்குழு மொத்தமும் தீயாக வேலை செய்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் சத்தமே இல்லாமல் ட்விட்டரில் செய்து வரும் சம்பவம் ட்ரெண்டாகி வருகிறது. 

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே #அன்று_MGR_இன்று_Vijay என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் புகைப்படங்களுடன் விஜய் போட்டோவை பதிவிட்டு அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர். 

அதில் மன்னர் கெட்டப்பில் விஜய்யும், எம்.ஜி.ஆரும். இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. மேலும் வயதான மூதாட்டிகளை அணைந்த படி இருக்கும் எம்.ஜி.ஆர்., விஜய் புகைப்படங்களை பதிவிட்டுள்ள ரசிகர்கள் தமிழக தாய்மார்களின் செல்லபிள்ளை விஜய் தான் என்று ட்வீட் செய்துள்ளனர். 

மேலும் மெர்சல் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் போது விஜய் நடித்து வருவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இப்படி ஒரு சீசனை படத்தில் வைத்ததற்காக அட்லீக்கு நன்றி தெரிவித்துள்ள ரசிகர்கள், அந்த போட்டோ மற்றும் வீடியோவையும் #அன்று_MGR_இன்று_Vijay ஹேஷ்டேக்கில் ஷேர் செய்துள்ளனர்.