"அவங்க ஸ்கிரிப்ட் படிக்கிற அழகே தனி".. அடுத்த பட பணிகளில் மும்முரம் காட்டும் சன்னி லியோன்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியான அடுத்த நிமிடமே இவருக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
ஆரம்ப காலகட்டத்தில் ஆபாச திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்திருந்தாலும், தற்பொழுது இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் சன்னி லியோன். கனடா நாட்டை சேர்ந்த இவர், தொடக்க காலத்தில் ஒரு சில அமெரிக்க படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருடைய கணவரின் தூண்டுதலால் இந்தியாவிற்கு வந்தார் சன்னி லியோன்.
அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு ஹிந்தியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆறாம் இடம் பிடித்தார். உண்மையில் பிக் பாஸ் இவருக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை கொடுத்தது என்றால் அது மிகையல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியான அடுத்த நிமிடமே இவருக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
இதையும் படியுங்கள் : மாவீரன் படத்துக்காக கம்மி சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் - ஏன்?
முதன் முதலில் 2014ம் ஆண்டு சரவணன் ராஜன் என்பவர் இயக்கத்தில் வெளியான "வடகறி" என்ற திரைப்படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம். அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி பெங்காலி, மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் தற்பொழுது தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த 2023ம் ஆண்டில் மட்டும் இவருடைய நடிப்பில் சுமார் 7 திரைப்படங்கள் தற்பொழுது உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனது சூட்டிங் பணிகளில் பிஸியாக இருக்கும் சன்னி லியோன் தனது அடுத்த திரைப்படம் குறித்த ஒரு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தற்போது படித்து வருவதாகவும், நிச்சயம் இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் தனது ட்விட்டர் பகுதியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : உடல் எடையை குறைத்து.. துரும்பாய் இளைத்துப்போன அஜித்!