ஜெயிலர் 2 டீசர் வெளியீடு: அனிருத், நெல்சனை வச்சு நெஞ்ச ரஜினிகாந்த்: பொங்கலுக்கு செம டிரீட்!

Rajinikanth Jailer 2 Announcement Teaser Released : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

Sun Pictures released the Rajinikanth Starrer Jailer 2 Announcement teaser on the occasion of Pongal 2025 rsk

Rajinikanth Jailer 2 Announcement Teaser Released : பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில், தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜூ, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் பலரும் பொங்கல் வைத்த வீடியோவானது தி ரூட் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசரை வெளியிட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் வச்சு கொண்டாடிய விஜய்: வைரலாகும் வீடியோ!

இதில், அனிருத் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் ஃபெங்கால் புயல் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது என்ன நெல்சா நம்ம சென்னைக்கே திரும்பிடலாமா என்று கேட்க புயலே சென்னையில் தான். அதனால் தான் கதை பற்றி விவாதிக்க உங்களை கோவாவிற்கு கூட்டி வந்திருக்கிறேன் என்கிறார் நெல்சன். என்னோட படம் வந்ததற்கு பிறகு 5 புயல் வந்துட்டு போய்விட்டது. நீங்கள் வாரம் வாரம் ஒவ்வொன்றாக ரிலீஸ் பண்ணுறீங்க. திடீரென்று வீட்டு ஜன்னல் எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு ரௌடிகள் வந்து விழுகிறார்கள். நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கிறார்கள். கையில் கத்தியுடன் ரஜினிகாந்த் வீட்டிற்குள் வர, நெல்சன் மற்றும் அனிருத் இருவரும் பெட்ஷீட் போட்டு மூடிக் கொள்கிறார்கள்.

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

ரஜினி அந்த பெட்ஷூட்டை விலக்கி ரவுடிகள் பற்றி கேட்க, இந்த பக்கம் ஓடி விட்டார்கள் என்று இருவரும் கை காட்ட, ரஜினி அவர்களை துரத்தி சென்றுவிட்டார். போகும் போது கையிலிருந்த பாம் ஒன்றையும் போட்டு சென்றுள்ளார். அதை கையில் எடுத்த நெல்சன், பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தது கூட தெரியாமல் போறாரு என்றார். ரஜினி அந்த வீட்டிலிருந்து வெளியேற பாம் வெடிக்கிறது. அவர்கள் முகம் முழுவதும் கருப்பாக மாறுகிறது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் போடப்படடுகிறது. மேலும், டைகர் கா ஹூகும் என்று ரஜினிகாந்த் பேசும் காட்சி இடம் பெறுகிறது. கடைசியில் இது பயங்கரமாக இருக்கிறது நெல்சன். இதையே ஓகே பண்ணிடலாம் என்கிறார் அனிருத்.

 

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு? இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் விமர்சனம்!

கிட்டத்தட்ட 4 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் விரைவில் என்று அந்த வீடியோ முடிகிறது. இது ரஜினிகாந்தின் 172ஆவது படம் ஆகும். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்ணா மேனன், சுனில், விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இவர்கள் தவிர தமன்னா, மோகன் லால், ஷிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், கிஷோர் ஆகியோர் பலரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios