கீர்த்தி சுரேஷ் உடன் பொங்கல் வச்சு கொண்டாடிய விஜய்: வைரலாகும் வீடியோ!

Thalapathy Vijay Pongal 2025 Celebration With Keerthy Suresh and Antony Thattil : கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் இணைந்து விஜய் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay Pongal 2025 Celebration With Keerthy Suresh and Antony Thattil at The Route Office rsk

Thalapathy Vijay Pongal 2025 Celebration With Keerthy Suresh and Antony Thattil : தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போன்று அருண் விஜய்யும் தனது பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் இப்போது தளபதி விஜய்யும் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடன் கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் பலரும் இருந்தனர்.

முதல் முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

எங்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடியிருக்கிறார் என்று பார்த்தால் விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷ் பழனிச்சாமிக்கு சொந்தமான தி ரூட் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இது கீர்த்தி சுரேஷூக்கு முதல் பொங்கல் என்பதால் அவரும் கணவர் ஆண்டனி தட்டில் உடன் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். கதிர், மமிதா பைஜூ ஆகியோரும் இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு? இயக்குநர் மாரி செல்வராஜ் முதல் விமர்சனம்!

இதையடுத்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பானை உடைத்தல், மியூச்சிக்கல் சேர் போன்ற போட்டிகளில் கீர்த்தி சுரேஷ் வெற்றி பெற்றார். அதன் பிறகு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவை ஜெகதீஷ் பழனிச்சாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஜய் அழகான ஹேர்ஸ்டைல், டிரெஸ்ஸில் வந்து ஒரு கலக்கு கலக்கியுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் விஜயகாந்தின் நீ பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

 

விஜய் தற்போது தனது 69ஆவது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தை கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பாபி தியோல், கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

 

 

இப்போது வரையில் கிட்டத்தட்ட 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீண்டும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios