பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரை நல்லவர்களாகவே நடித்து வந்த போட்டியாளர்கள், இனியும் அதனை தொடர முடியாது என்பதால் தற்போது தங்கள் சுய ரூபத்தை காட்ட தொடங்கி இருக்கின்றனர். திடீரென நடக்கும் இந்த மாற்றங்களை பார்க்கும் போது பிக் பாஸ் ஸ்கிரிப்டட் நிகழ்ச்சியோ எனும் சந்தேகம், இப்போது மக்கள் மத்தியில் அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது.

அதே சமயம் விறுவிறுப்பு கூடி இருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல வெறுப்பேற்றும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரி எனும் பொறுப்பு ஐஸ்வர்யா துத்தாவிற்கு தரப்பட்டிருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக அலம்பல் செய்து வருகிறார். சக போட்டியாளர்களிடம் அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாலாஜி தலையில் குப்பையை கொட்டுவது, ரித்விகா, சென்றாயன் போன்றோரை பேசியே வெறுப்பேற்றுவது என எல்லா வகையிலும் எல்லை மீறுகிறார் ஐஸ்வர்யா. இந்த ஐஸ்வர்யாவிற்கு ஆலோசகர் ஜனனி, பாதுகாவலர் டேனி.

நேற்றைய நிகழ்ச்சியின் போது மும்தாஜ் கையில் கத்தியுடன் நடமாடியதை பார்த்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாரோ என பயந்த ஜனனி, ஐஸ்வர்யாவிடம் இதை தெரிவித்தார். வீட்டின் சர்வாதிகாரியான ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் அனைத்து கத்தியை எடுத்து ஒளித்து வைக்க உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் பயப்பட்ட படியெல்லாம் எதுவும் அங்கு நடந்துவிடவில்லை.

அதற்கு பதிலாக ஐஸ்வர்யாவிற்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்கள் தான், இன்றைய பிரமோவில் இடம் பெற்றிருக்கிறது.