Sudha Kongara : சூரரைப் போற்று படத்திற்கு மட்டும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை ஆகிய 5 விருதுகள் கிடைத்துள்ளன.
இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பின்னர் இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் சுதா கொங்கரா தான் இயக்கினார்.
இதன்பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் சுதா கொங்கரா இயக்கி வெளியிட்ட படம் தான் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனம் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கினார் சுதா. இதில் நடிகர் சூர்யா ‘மாறா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படியுங்கள்... 5 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் சூரரைப் போற்று - யார் யாருக்கு என்ன விருது.. முழு விவரம்

இப்படம் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. அந்த சமயத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக சூரரைப்போற்று படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டனர். வெளியானது முதல் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது இப்படம்.
தற்போது இப்படத்துக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு அங்கீகாரம் தான் தேசிய விருது. இப்படத்திற்கு மட்டும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை ஆகிய 5 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த மகிழ்ச்சியான தருணத்தை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் சுதா கொங்கரா. இதுகுறித்த புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், “நாம் ஜெயிச்சிட்டோம் மாறா” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தேசிய விருதால் பெருமகிழ்ச்சி! ஜோவிற்கும், என் பிள்ளைகளுக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன்- சூர்யா நெகிழ்ச்சி
