நடிகை ஸ்ரீரெட்டி ஆரம்பத்தில் தெலுங்கு திரையுலகில் இவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பிரபலங்கள் குறித்து தைரியமாக 'ஸ்ரீலீக்ஸ்' என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனால் இவருக்கு தெலுங்கு திரையுலகில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. 

இதன் காரணமாக தற்போது இவருக்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்காததால், பொருளாதாரா ரீதியாகவும் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக ஸ்ரீரெட்டி சமீபத்தில் கூறியிருந்தார். 

இதைதொடர்ந்து தற்போது 'தமிழ்லீக்ஸ்' என்கிற பெயரில் தமிழ் திரையுலகை சேர்ந்த, நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றங்களை முன்வைத்து வருகிறார். இதனை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஸ்ரீரெட்டி, நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக உணர்கிறேன் என்பது போல் ஒரு ட்விட் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரீரெட்டி, விஷாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முதல் முறையாக நடிகர் விஷாலிடம் தன்னை மன்னித்து விடுமாறு கூறியுள்ளார். மேலும் நடிகைகளுக்கு நிகழம் அநீதிகளை தட்டிக்கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீகள் என்பதை நான் அறிவேன். உங்களால் தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.