இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு  ஓடிடி தளத்தில் வெளியாகி, இதுவரை அமேசான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, இதுவரை அமேசான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் கவர்ந்தார் சூர்யா. இவரது நடிப்பிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தையும் தெரிவித்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: #Breaking ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு! ஆதரவு கேட்டாரா?

ஓடிடி தளத்தில் வெளியாகாமல், திரையரங்கில் ஒருவேளை 'சூரரை போற்று' திரைப்படம் வெளியாகி இருந்தால், உலக அளவில் வசூலிலும் சாதனை படைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தார் இந்த படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி.

மேலும் ஜி.வி.பிரகாஷின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்து, பலரது காலர் டியூனாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக எடுக்கப்பட்டு, இடம்பெறாமல் டெலீட் செய்யப்பட்ட காட்சியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். இதிலும் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு சூர்யா நடித்துள்ளது தெரிகிறது.

மேலும் செய்திகள்: நான் 10 வருஷமா லாக் டவுனில் இருக்கிறேன்... கலங்கி அழுத வைகைப்புயல் வடிவேலு..!

தன்னுடைய இலட்சியத்தை அடைய விரும்பிய மாறா... அனைத்தையும் இழந்து, மனைவி நடத்தி வரும் பொம்மி பேக்கிரியில் வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கனவு நிறைவேறாத நிலையில், விரதியுடன் இருக்கும் சூர்யா, முகத்தில் ஆத்திரம் போங்க ஏர் இழுக்கும் காட்சிகளும் உள்ளது. அந்த வீடியோ இதோ....