MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya : கருப்பு ஹிட்டுக்கு பின் பிரம்மாண்ட படத்தில் கமிட்டான சூர்யா... இயக்கப்போவது யார் தெரியுமா?

Suriya : கருப்பு ஹிட்டுக்கு பின் பிரம்மாண்ட படத்தில் கமிட்டான சூர்யா... இயக்கப்போவது யார் தெரியுமா?

Suriya Next Movie : கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 29 2026, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya Next Film
Image Credit : X

Suriya Next Film

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படம் என்றால் அது சூர்யாவின் கருப்பு தான். அந்த மாபெரும் வெற்றிப் படத்துக்கு பின்னர் சூர்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கேஜிஎஃப், காந்தாரா போன்ற தொடர் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் சூர்யாவின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இயக்குநர் யார்?
Image Credit : X

இயக்குநர் யார்?

சூர்யா நடித்த 'ஜெய் பீம்', ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கிய டி.ஜே. ஞானவேல் தான் இந்தப் படத்தையும் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எஸ்.ஏ. கதிர் ஒளிப்பதிவாளராகவும், ஃபிலோமின் ராஜ் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். தொடர் தோல்விகளுக்குப் பிறகு, சூர்யா மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தியேட்டர்களில் வெளியான சூர்யாவின் 'கருப்பு' என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் 300 கோடி கிளப்பில் இடம்பிடித்தது.

Related Articles

Related image1
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Related image2
Suriya Politics: அரசியலுக்கு வர்றேனா? சூர்யா வைத்த முற்றுப்புள்ளி! ரசிகர்களுக்கு ஷாக்
34
சூர்யா கைவசம் உள்ள படங்கள்
Image Credit : X

சூர்யா கைவசம் உள்ள படங்கள்

ஹோம்பாளே ஃபிலிம்ஸ் படத்திற்கு முன்பு, சூர்யாவின் நடிப்பில் மேலும் இரண்டு முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. 'லக்கி பாஸ்கர்', 'வாத்தி' போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி ஒரு படத்தை இயக்குகிறார். அந்தப் படத்திற்கு 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜு ஹீரோயினாகவும், ராதிகா சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் புரொமோஷனல் மெட்டீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதற்குப் பிறகு, 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லென் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.

44
எகிறும் எதிர்பார்ப்பு
Image Credit : our own

எகிறும் எதிர்பார்ப்பு

ஹோம்பாளே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடைசியாக 'காந்தாரா: சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. பிரசாந்த் நீல் மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி இயக்கும் படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஹோம்பாளே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக சூர்யா படமும் இணைந்துள்ளது. ஏற்கனவே சூர்யா, ஞானவேல் கூட்டணியில் வெளிவந்த ஜெய் பீம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இந்த படத்துக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya Politics: அரசியலுக்கு வர்றேனா? சூர்யா வைத்த முற்றுப்புள்ளி! ரசிகர்களுக்கு ஷாக்
Recommended image2
கட்டா குஸ்தி 2 முதல் பாக்யராஜின் டார்க் வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள்
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Recommended image2
Suriya Politics: அரசியலுக்கு வர்றேனா? சூர்யா வைத்த முற்றுப்புள்ளி! ரசிகர்களுக்கு ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved