MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya Politics: அரசியலுக்கு வர்றேனா? சூர்யா வைத்த முற்றுப்புள்ளி! ரசிகர்களுக்கு ஷாக்

Suriya Politics: அரசியலுக்கு வர்றேனா? சூர்யா வைத்த முற்றுப்புள்ளி! ரசிகர்களுக்கு ஷாக்

Suriya Ends Political Entry Speculation : நடிகர் சூர்யா அரசியலில் குதிக்க உள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், அதுபற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 29 2026, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya Ends Political Entry Speculation
Image Credit : X

Suriya Ends Political Entry Speculation

தமிழ்நாடு அரசியலில் சினிமா நட்சத்திரங்களுக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் இப்போது 'தளபதி' விஜய், 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பெற்று முதல்வராக பொறுப்பேற்று, தமிழ்நாடு அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்த நிலையில், விஜய்யின் பாதையில் நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய் எண்ட்ரிக்குப் பிறகு சூர்யா பக்கம் திரும்பிய கவனம்
Image Credit : Asianet News

விஜய் எண்ட்ரிக்குப் பிறகு சூர்யா பக்கம் திரும்பிய கவனம்

தளபதி விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறத் தொடங்கியுள்ளன. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு நடிகருக்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கிடைப்பது இதுவே முதல்முறை எனப் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், சூர்யாவின் ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகரை ஒரு 'மக்கள் தலைவராக' பார்க்க விரும்புகிறார்கள். சூர்யா, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தனது 'அகரம் ஃபவுண்டேஷன்' மூலம் செய்துவரும் சமூக சேவைகளால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் நன்கு அறியப்பட்டவர்.

Related Articles

Related image1
சூர்யா - ஜோதிகா மகளா இது? அப்போ குழந்தை நட்சத்திரம்... இப்போ மும்பைல பெரிய லாயர்!
Related image2
Suriya-Jyothika : சூர்யா-ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? ராஜா-ராணியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!
34
ரசிகர் மன்ற கூட்டத்தில் வெளியான பரபரப்பான பேச்சு!
Image Credit : Asianet News

ரசிகர் மன்ற கூட்டத்தில் வெளியான பரபரப்பான பேச்சு!

சூர்யாவின் அரசியல் பிரவேசம் பற்றிய வதந்தி காட்டுத்தீபோல் பரவ, சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் தான் காரணம். 'அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம்' சார்பாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய இயக்கத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர், "காலம் முடிவு செய்துவிட்டது, கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. அவருக்காக உழைக்க நீங்கள் தயாரா?" என்று ரசிகர்களைப் பார்த்துக் கேட்டார். இதற்கு அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்களும், ஆரவாரமும் எழுந்தன. "நீங்கள் தயாராக இருந்தால், சூர்யா விரைவில் ஒரு பெரிய அதிகாரத்திற்கு வருவது உறுதி" என்று அவர் பேசியது, இப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

44
சூர்யா விளக்கம்
Image Credit : Dream Warrior Pictures

சூர்யா விளக்கம்

விஜய் ஏற்கனவே களத்தில் இறங்கி, முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். இப்போது சூர்யா அவருடன் கைகோப்பாரா அல்லது தனியாக ஒரு புதிய பாதையை உருவாக்குவாரா என்ற பேச்சு எழத் தொடங்கியது. இந்த நிலையில் சூர்யா தரப்பில் இருந்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், 'எனக்குக் கட்சி அரசியல் வேண்டாம், ஆனால் எனது சமூக சேவைப் பணிகள் தொடரும்' என்று ஒரு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ரசிகர் மன்றக் கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசியது பெரிய சர்ச்சையானதைத் தொடர்ந்து, சூர்யா இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார். 'காலமும் நேரமும் கூடிவந்தால் சூர்யாவை யாராலும் தடுக்க முடியாது, அவர்தான் வழிநடத்துவார்' என்று அந்த நிர்வாகி பேசியதுதான் இந்த விவாதத்துக்கே காரணம். பின்னர், இது தங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இல்லை என்று சூர்யா ரசிகர் மன்றம் விளக்கம் கொடுத்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கட்டா குஸ்தி 2 முதல் பாக்யராஜின் டார்க் வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள்
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Recommended image3
Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?
Related Stories
Recommended image1
சூர்யா - ஜோதிகா மகளா இது? அப்போ குழந்தை நட்சத்திரம்... இப்போ மும்பைல பெரிய லாயர்!
Recommended image2
Suriya-Jyothika : சூர்யா-ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? ராஜா-ராணியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved