MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கட்டா குஸ்தி 2 முதல் பாக்யராஜின் டார்க் வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள்

கட்டா குஸ்தி 2 முதல் பாக்யராஜின் டார்க் வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள்

This Week Theatre and OTT release Movies : இந்த வாரம் தியேட்டரைக் காட்டிலும் ஓடிடியில் தான் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Jun 29 2026, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Theatre Release Movies
Image Credit : X

Theatre Release Movies

தியேட்டர்களைப் போல் ஓடிடியிலும் தற்போது புதுப்படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின்றன. இதனால் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன. அந்த வகையில் இந்த வாரமும் இரண்டு படங்கள் தான் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன. அதில் ஒன்று விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2. இது கடந்த 2022ம் ஆண்டு ரிலீஸ் ஆன கட்டா குஸ்தி படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்துக்கு போட்டியாக நாக பந்தம் என்கிற திரைப்படம் திரைக்கு வருகிறது. விராத் கர்ணா நடித்த இந்த பான் இந்தியா படம் வருகிற ஜூலை 3ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர கடந்த சில முன் மறைந்த நடிகர் பாக்யராஜ் நடித்த டார்க் என்கிற படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தில் நட்டி நட்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : Asianet News

ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகும் படங்கள்

Pritam And Pedro

அர்ஷத் வார்சி, வீர் ஹிரானி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் சீரிஸ் இது. பழைய ஸ்டைலில் கேஸ்களை டீல் செய்யும் சீனியர் போலீஸ், டெக்னாலஜியை நம்பும் இளம் போலீஸ் இருவரும் சேர்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதுதான் கதை. இப்படம் ஜூலை 3ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Mollywood Times

'Premalu' புகழ் நஸ்லென் கஃபூர் ஹீரோவாக நடித்துள்ள படம் 'Mollywood Times'. அபினவ் சுந்தர் நாயக் இயக்கியுள்ளார். மலையாள சினிமா இண்டஸ்ட்ரியைக் காப்பாற்ற, ஒரு பெரிய ஹாரர் டைரக்டராக வேண்டும் என கனவு காணும் இளைஞனின் கதை இது. தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஜூலை 3 அன்று ஓடிடி-க்கு வருகிறது.

Tavvai

இது ஒரு இந்தி ஹாரர் படம். பித்ரு தோஷம், தெய்வ சாபம், லட்சுமி-அலட்சுமிக்கு இடையிலான புராணப் போராட்டம் போன்ற விஷயங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. அர்பித் ரங்கா, மனோஜ் ஜோஷி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 29 தேதி ரிலீஸ் ஆகிறது.

Juhi Mui

'Bigg Boss 18' புகழ் ஈஷா சிங் நடித்துள்ள டெய்லி சோப் இது. ஆட்டிசம் பாதிப்புள்ள ஒரு திறமையான பெண், தன் சகோதரன் உதவியுடன் வழக்கறிஞராகி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் கதை. இதுவும் ஜூன் 29 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Related Articles

Related image1
OTT : பிளாஸ்ட் முதல் லிங்கம் வரை... ஜூன் 22 முதல் 27 வரை ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
Related image2
OTT : அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இதோ
34
நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகும் படங்கள்
Image Credit : Asianet News

நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகும் படங்கள்

Peddi

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்த படம் பெத்தி. இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். மேலும் ஷிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் வருகிற ஜூலை 2ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Super Sabbu

சந்தீப் கிஷன் நடித்துள்ள தெலுங்கு வெப் சீரிஸ் 'Super Sabbu'. ஒரு பழமைவாத கிராமத்தில் பாலியல் கல்வி அதிகாரியாக சந்தீப் கிஷன் வருகிறார். சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களது வாழ்க்கை எப்படி இணைகிறது என்பதுதான் கதை. இது ஜூலை 2ந் தேதி ரிலீஸ் ஆகும்.

Survival Of The Thickest – Season 3

இந்த காமெடி சீரிஸ் மூன்றாவது மற்றும் கடைசி சீசனுடன் வருகிறது. பணப் பரிசுக்காக போட்டியாளர்கள் எதிர்கொள்ளும் ஜாலியான உடல் மற்றும் மன ரீதியான சவால்களின் கதை தொடர்கிறது. இந்த வெப் தொடரும் ஜூலை 2ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

Human Vapor

ஜப்பானின் ஆக்‌ஷன் த்ரில்லர் சீரிஸ் 'Human Vapor'. தன் உடலை வாயுவாக மாற்றி எந்தத் தடையையும் தாண்டும் ஒரு மர்ம நபர், தொடர் கொலைகள் செய்து போலீஸுக்கு சவால் விடுகிறார். இதுதான் படத்தின் மெயின் கதை. ஜூலை 2 முதல் பார்க்கலாம்.

Enola Holmes 3

மில்லி பாபி பிரவுன் மீண்டும் எனோலா ஹோம்ஸ் வேடத்தில் வருகிறார். இந்த முறை மால்டாவில் நடக்கும் ஒரு புதிய கேஸை விசாரிக்கும்போது, அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன. ஜூலை 1 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

44
பிரைம் வீடியே வெளியீடுகள்
Image Credit : Asianet News

பிரைம் வீடியே வெளியீடுகள்

Elle

'Legally Blonde' படத்தின் ப்ரீக்வல் வெர்ஷனாக உருவாகியுள்ள டிவி சீரிஸ் 'Elle'. அந்தப் படக் கதைக்கு முன்பு, ஹை ஸ்கூலில் எல்லே வுட்ஸின் வாழ்க்கையை இந்த சீரிஸ் காட்டுகிறது. ஜூலை 1 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Obsession

கெர்ரி பார்க்கர் இயக்கிய சூப்பர்ஹிட் ஹாரர் த்ரில்லர் 'Obsession', தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு இப்போது இந்தியாவில் ஓடிடி-க்கு வருகிறது. ஆனால், ஆரம்பத்தில் வாடகை முறையில் (Rental) மட்டுமே கிடைக்கும். இதைப் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த ஹாரர் லவ் ஸ்டோரி, உலகையே உலுக்கியது என்று சொல்லலாம். தன் காதலனுக்கு, காதலி காட்டும் நரகவேதனை காட்சிகள் முதுகெலும்பை சில்லிட வைக்கும். மேக்கிங்கிற்கு உலக ரசிகர்கள் ஃபிதா ஆகிவிட்டனர். ஜூன் 29 முதல் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?
Recommended image3
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Related Stories
Recommended image1
OTT : பிளாஸ்ட் முதல் லிங்கம் வரை... ஜூன் 22 முதல் 27 வரை ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
Recommended image2
OTT : அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved