ஹாலிவுட், மற்றும் பொலிவுட்டில் முதலில், பிரபலமாகி வந்த வெப் சீரிஸ்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, பலர் வெப் சீரிஸ் எடுக்க ஆர்வம் கட்டி வருகிறார்கள். அதே போல், வெள்ளித்திரை முன்னணி நடிகைகளான சமந்தா, தமன்னா, உள்ளிட்ட பலர் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் உள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: பிச்சைக்காரன் - 2 கதையை எழுதி முடித்த நடிகர்! இயக்குனர் யார்?
 

அதே போல்,  வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் பெரும்பாலான வெப்சீரிஸ்களில் ஆபாசமும், வன்முறையும் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ள வெப் சீரிஸின் டீசர் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ’காட்மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின், டீசரில் பிராமணர் சமூகம் குறித்த சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சில ஆபாச காட்சிகளும் காட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: ராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்! இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு!
 

ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஆகியோர் இந்த வெப் சீரிஸில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாமியார் வேடத்தில் தோன்றியுள்ள நடிகர் ஜெயப்ரகாஷ், ஒரு பிராமணர் மட்டும் தான் வேதம் சாஸ்திரம் படிக்க வேண்டும் என எந்த சாஸ்திரமும் கூறியிருக்கிறது? என கேள்வி எழுப்பி ’
‘என்னைச் சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியர்களாக உள்ளனர்’ என கூறுகிறார்.

மேலும் செய்திகள்: சிறிய வயதில் சீரியலில் குட்டி கிருஷ்ணனாக நடித்த தமிழ் ஹீரோ..! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்!
 

பின் டானியல் பாலாஜியை ’நீ வேதம் படிக்க வேண்டும் அய்யனார்... என கூறியபின், டானியல் பாலாஜியின் சில உச்ச கட்ட ஆபாச காட்சிகள் காட்டப்படுகிறது. பின்  ஒரு பிராமணன் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டப்போகிறேன் என கூறுகிறார்.’

இதை தொடர்ந்து, ஜெயப்ரகாஷ் போலீசால் அழைத்து செல்லப்படும் காட்சிகள், சோனியா அகர்வால் மிரட்சியுடன் பார்ப்பது போன்ற சில விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகியுள்ள இந்த டீசருக்கு பிராமணர்கள் மற்றும் இந்து மத அமைப்புகள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் இருக்கு என்றே எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த ‘காட்மேன்’ வெப்சீரீஸை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். சதீஷ் இசையில் லக்‌ஷ்மண் குமார் ஒளிபதிவில் இந்த வெப்சீரீஸ் உருவாகியுள்ளது. இந்த சீரீஸ் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.