பிச்சைக்காரன் - 2 கதையை எழுதி முடித்த நடிகர்! இயக்குனர் யார்?

கடந்த 2016 ஆம் ஆண்டு, வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்'. இந்த படத்தில்,  பிரபல இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சட்னா டைட்டஸ் என்பவர் அறிமுகமானார். 

pichaikaran 2 movie story completed but whose the director?

சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ போன்ற மென்மையான காதல் கதைகளை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியவர் இயக்குனர் சசி. இவருடைய இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்'. இந்த படத்தில்,  பிரபல இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சட்னா டைட்டஸ் என்பவர் அறிமுகமானார். 

மேலும் செய்திகள்: இரண்டு சகோதரர்களை பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! ரோட்டில் நின்று வேலை செய்த சோகம்! அதிர்ச்சி தகவல்!
 

மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து இருந்தார். இந்த படம் எதிர்பாராத விதமாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபீசில் ரூபாய்.42 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. அதே போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய போது கூட டி.ஆர்.பி-யில் தட்டி தூக்கியது.

pichaikaran 2 movie story completed but whose the director?

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்த நிலையில், தற்போது இதற்கு விடை கிடைத்துள்ளது.  இந்த ஊரடங்கு ஓய்வில் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன்' படத்தின் கதையை எழுதி முடித்து விட்டதாக கோலிவுட் திரையுலகில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது.

மேலும் செய்திகள்: ராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்! இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு!
 

pichaikaran 2 movie story completed but whose the director?

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ள நான் ரெடி! இப்படி ஒரு பிரச்சனை இருக்கு? 'பிகில்' பாண்டியம்மா சொன்ன காரணம்!
 

ஆனால் இந்த படத்தை இயக்குனர் சசி இயக்குவாரா அல்லது விஜய் ஆண்டனி, இந்த படத்தை இயக்கி நடிப்பாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஊரடங்கு ஓய்வுக்கு பின், இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் ஆண்டனி தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இன்னும் பெயரிடப்படாத மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios