ராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்! இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு!
தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா தற்போது, திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், சீரியல் கதாநாயகியாக மாறி கலக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா தற்போது, திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், சீரியல் கதாநாயகியாக மாறி கலக்கி வருகிறார். மேலும், சமீபத்தில் இவர் நீண்ட இடைவெளிக்கு பின், தன்னுடைய கணவர் சரத்குமாருடன் நடித்த ' வானம் கொட்டட்டும்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் ராதிகாவுக்கு ரேயான் என்கிற ஒரு மகளும், ராகுல் என்கிற மகனும் உள்ளனர். ரேயான், கடந்த 2016 ஆம் ஆண்டு, கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே தாரக் என்கிற ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன், அழகிய பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு தன்னுடைய அம்மாவின் நினைவாக Radhya என பெயர் சூட்டினார்.
ராதிகாவின் மகள் ரேயான் அடிக்கடி, சமூக வலைத்தளத்தில், தன்னுடைய மகன் தாரக் செய்யும் சேட்டைகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர், அம்மாவிற்கு உதவியாக, மிகவும் பொறுப்பான செயலை செய்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
வாஷிங் மிஷின் உயரம் கூட இல்லாத தாரக், தன்னுடைய அம்மா, அப்பா, மற்றும் தன்னுடைய உடைகள் ஒவ்வொன்றாக எடுத்து துணியை துவைப்பதற்காக வாஷிங் மெஷின் உள்ளே போடும் காட்சி இதில் உள்ளது. இந்த சிறிய வயதில் இவ்வளவு பொறுப்பா? என பலர் இவருடைய இந்த செயலை பாராட்டி வருகிறார்கள்.