இயக்குனர் அட்லீ இயக்கத்தில், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்து, மிக சிறிய வயதிலேயே தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர்  பிரபல காமெடியன் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே, தன்னுடைய நிறம், உடல்வாகு என அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

மேலும் செய்திகள்: ராதிகாவின் பேரன் செய்த செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்! இந்த வயசுல என்ன ஒரு பொறுப்பு!
 

படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின்  ஆல் டைம் பொழுது போக்கு என்றால் அது டிக்-டாக் வீடியோக்கள் வெளியிடுவது தான். இப்படி வெளியான வீடியோ எதேர்ச்சியாக அட்லீ கண்ணில் படவே தான் 'பிகில்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பாரத நாட்டிய கலைஞரான இந்திரஜா அவ்வப்போது அப்பா, அம்மா, தங்கையுடன் சேர்ந்தும் விதவிதமான டிக்-டாக் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். சமீபத்தில் கூட இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கர் உடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாட்டிற்கு போட்ட சூப்பர் டான்ஸ் செம்ம வைரலானது. 

மேலும் செய்திகள்: படுக்கை அறையில் நடிகையுடன் நெருக்கம்! விவாகரத்துக்கு காரணம் இதுவா? பற்றி எரியும் நடிகரின் பிரச்சனை!
 

கடந்த ஒரு சில வாரங்களாக தன்னுடைய பாட்டியின் மறைவால் ஏற்பட்ட சோகத்தில் இருந்த இந்திரஜா அதில்  இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுடன் லைவ் சாட் செய்து வருகிறார். அதுபோல் இவர் சாட்டிங் செய்த போது, இவரிடம் ரசிகர் ஒருவர்... நீங்கள் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் செய்திகள்: இரண்டு சகோதரர்களை பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! ரோட்டில் நின்று வேலை செய்த சோகம்! அதிர்ச்சி தகவல்!
 

இதற்கு பதிலளித்துள்ள இந்திரஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் ரெடி, ஆனால் நான் மைனர் என்பதால் என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என கூறியுள்ளார்.