படுக்கை அறையில் நடிகையுடன் நெருக்கமான காட்சி! விவாகரத்துக்கு காரணம் இதுவா? பற்றி எரியும் நடிகரின் பிரச்சனை!
பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் மற்றும் அவருடைய மனைவி ஆலியா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருடைய மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பரபரப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியில் அடங்குவதற்குள், மற்றொரு நடிகையுடன் நவாஸுதீன் சித்திக் மிகவும் நெருக்கமாக நடித்த வீடியோ ஒன்றை வைரலாகி இது தான் அவருடைய விவாகரத்துக்கு காரணம் என சிலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் மற்றும் அவருடைய மனைவி ஆலியா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருடைய மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பரபரப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியில் அடங்குவதற்குள், மற்றொரு நடிகையுடன் நவாஸுதீன் சித்திக் மிகவும் நெருக்கமாக நடித்த வீடியோ ஒன்றை வைரலாகி இது தான் அவருடைய விவாகரத்துக்கு காரணம் என சிலர் கொளுத்தி போட்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ராகவா லாரன்ஸின் ஆசிரமத்தில் இருக்கும் 10 மாணவிகள்... 5 மாணவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா!
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்து, தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக். 45 வயதாகும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஆலியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் நவாஸுதீன் சித்திக், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரானபுதனாவுக்கு சென்றுள்ளார்.
மேலும் செய்திகள்: பிரபல இயக்குனர் வீட்டில் பணிபுரியும் 2 பேருக்கு கொரோனா! 14 நாள் தனிமை படுத்தப்பட்ட பிரபலம்!
அவர் அங்கு செல்வதற்கு முன்பு மகாராஷ்டிரா அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று, கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்ட பின்பே, சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து வெளியூருக்கு சென்றுள்ளதால் அடுத்த 14 நாட்களுக்கு நவாஸுதீன் சொந்த ஊரிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: படுக்கைக்கு மறுத்ததால் பறிபோன பட வாய்ப்பு! மாநிறத்தால் நிராகரிப்பு, ஐஸ்வர்யா ராஜேஷின் வலி நிறைந்த வெற்றி!
இந்நிலையில், நவாஸுதீன் சித்திக் மனைவி, இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய லாயர் மூலம் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தற்போது தபால் நிலையங்கள் செயல்படாததால், இந்த நோட்டீசை அவர், வாட்டஸ் ஆப் மற்றும், ஈமெயில் மூலமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை நவாஸுதீன் சித்திக் இதுகுறித்து எந்த அறிவிப்பை வெளியிட வில்லை என்றாலும், இவருடைய மனைவி ஆலியா சமூக வலைத்தளத்தில் அடுக்கடுக்காக பல குற்றங்களை முன்வைத்தார்.
மேலும் செய்திகள்: இரண்டு சகோதரர்களை பறிகொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..! ரோட்டில் நின்று வேலை செய்த சோகம்! அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில், நவாஸுதீன் சித்திக் கடந்த 2018 ஆம் ஆண்டு நடித்த வெப் சீரிஸ் ஒன்றில் நடிகை ஒருவருடன் மிகவும் நெருக்கமாக நடித்த காட்சியை வெளியிட்டு, கடந்த 2 வருடத்திற்கு முன் வெளியான இந்த காட்சி தான், கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என கூறி வருகிறார்கள். ஆனால் இதற்க்கு மற்ற சிலர், இருவருக்கும் வாழ்க்கையில் ஒருமித்த கருத்து இல்லாததால் மட்டுமே ஆலியா விவாகரத்து வரை சென்றுள்ளனர் எனவும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இந்த வீடியோ விவாகரத்துக்கு காரணமாக இருக்காது என்பதே பலருடைய கருத்து.