தமிழில் 'பம்பாய்' படத்தில் ஹம்மா ஹம்மா... அந்த அரபிக் கடல்லோரம் பாடலுக்கு நடனமாடிய சோனாலி பிந்த்ரே  'காதலர் தினம்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 

மேலும் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த இவர் 2002 -ல் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

தற்போது 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே, சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லி ரசிகர்களை அதிர வைத்தார். அவர் விரைவில் குணமாக பலரும் வேண்டினர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனாலி தற்போது சிகிச்சைக்காக மொட்டை அடித்துள்ளார். அந்த புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் "நோய் பாதிப்பில் இருக்கும் நான், இப்போது ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியோடு கழிக்கிறேன். தோழிகள் துணையாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோல்டி பெல் இதுகுறித்து கூறுகையில், சோனாலியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என்றும், தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார். 

எனினும் ரசிகர்கள் பலர், விரைவில் நீங்கள் இந்த நோயில் இருந்து மீண்டு வருவீர்கள் என நம்புவதாக கூறி... சோனாலிக்கு தைரியம் கொடுத்து வருகிறார்கள்.