குத்தாட்டத்தில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்! 'மாவீரன்' படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மாவீரன்' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை உச்சாகமடைய செய்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு படங்களையும், வித்தியாசமான கதைக்களத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் தேர்வு செய்து நடித்த திரைப்படங்களான எதிர்நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், டாக்டர், போன்ற படங்கள் இவரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக நின்றது.
தற்போது தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், போன்ற முன்னணி நடிகர்களுக்கு நிகராக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன், 'மண்டேலா' படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை வென்ற, மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார்.
AK 62 படத்தின் அப்டேட் வெளியிட நேரம் குறித்து விட்ட லைகா..? உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'விரும்பன்' படத்தின் மூலம் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்திருக்கும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது 90% முடிந்துவிட்ட நிலையில்.. படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில்... இந்தப் பாடலின் ப்ரோமோ காட்சியை தற்போது படக்குழு வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் ப்ரோமோவிலேயே வெறித்தனமான குத்தாட்டம் போட்டு, ரசிகர்களையும் ஆட வைத்துள்ளார். தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் மாவீரன் படத்தை படத்தில் படத்திற்கு பாரத் ஷங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'அயலி' வெப் தொடர் அம்மா நடிகை... அனுமோலின் ஹாட் கிளாமர் லுக் போட்டோஸ்!