AK 62 படத்தின் அப்டேட் வெளியிட நேரம் குறித்து விட்ட லைகா..? உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..!
அஜித்தின் 62 ஆவது படம் குறித்த அப்டேட், எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள தகவல் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், ஐந்து வாரங்களைக் கடந்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
'துணிவு' படத்தின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் அஜித், இந்த வெற்றியை தன்னுடைய குடும்பத்துடன் போர்ச்சுகல் நாட்டில் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி, தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட படு வைரலானது.
இனி 'ராஜா ராணி 2' சீரியலில் நான் சந்தியா இல்லை..! ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட ரியா விஸ்வநாதன்!
இதைத்தொடர்ந்து தற்போது அஜித் சென்னை வந்துவிட்ட நிலையில், ஏன் இன்னும் அஜித்தின் 62 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக லைகா நிறுவனம், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது நாளை காலை 10:30 மணிக்கு லைகா நிறுவனம், தன்னுடைய 24 ஆவது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளது. இது ஏகே 62 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக அஜித்தின் ரசிகர்கள், இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிக்கும் 62 வது படத்தை, முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து அவர் விலகவே தற்போது மகிழ் திருமேனி இப்படத்தில் படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. எனினும் நாளை ஏகே 62 படம் குறித்த தகவல் வெளியாகுமா? அல்லது வேறு ஏதேனும் படத்தின் தகவல் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.