சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரையில் கால் பதித்து, முன்னணி நடிகராக மாறுவது என்பது சுலபமான விஷயம் அல்ல. நடிப்பின் மீது முழு அர்ப்பணிப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் தான் நடக்கும். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று தான் கூற வேண்டும்.

மேலும் செய்திகள்: விருது விழா என்றாலே இப்படித்தானா?... இனியாவின் ஓவர் கிளாமர் உடையை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்...!
 

பிரபல தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியன், பின் தொகுப்பாளர், டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர் என மக்கள் மத்தியில் பிரபலமாகி, நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த 3 படத்தில் குணச்சித்திர வேடத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து மெரினா, படத்தில் ஹீரோவாக நடித்தார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இதை தொடர்ந்து, மனம் கொத்தி பறவை, மான் கராத்தே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினி முருகன் என காமெடி கலந்த ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்தது இவருக்கு நன்றாகவே கை கொடுத்தது 5 வருடத்திலேயே முன்னணி நடிகர்கள் அளவிற்கு உயர்ந்தார்.

மேலும் செய்திகள்: என் பொக்கிஷம்... அவளுக்கான உலகத்தை அமைத்து கொடுப்பேன்! அப்பாவாக உருகிய நடிகர் சஞ்சீவ்!
 

தற்போது கோலிவுட் திரையுலகின் டாப் - நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகும் படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் 'டாக்டர்' படத்திலும், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், 'அயலான்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவு பெற்று விட்ட நிலையில், கடைசி கட்ட படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

இதனால், தற்போது கிடைத்துள்ள ஊரடங்கு ஓய்வில் பல படங்களின் கதையை கேட்டு வருகிறாராம். அந்த வகையில் இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனர் அசோக் என்பவர் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் படம் முழுக்க இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவு, இது சிவகார்த்திகேயனின் பாணியில்... கேலி... கிண்டல்... நிறைந்த என்டர்டெயின்மெண்ட் படமாக உருவாக உள்ளதாம். 

மேலும் செய்திகள்: கதறி அழும் பெண்! அதிர வைக்கும் பகீர் காட்சிகள்! 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலருக்கு முன்பே சூர்யா வெளியிட்ட காட்சி!
 

ஏற்கனவே... ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் சிவகார்த்திகேயன் 2 வேடங்களில் நடித்திருந்தாலும், இந்த எந்த அளவிற்கு... சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.