'ராஜா ராணி' சீரியலில் கணவன் மனைவியாக இணைந்து நடித்து, பின் உண்மையாகவே காதலித்து, திருமணம் செய்து கொண்ட தம்பதி ஆல்யா மானசா - சஞ்சீவ். இவர்களுக்கு குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களே ஆகிறது. இந்நிலையில், தன்னுடைய குழந்தையை முதல் முறையாக தூக்கிய புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

சின்னத்திரையில் இணைந்து நடிப்பவர்களை உண்மையாகவே, வாழ்க்கையிலும் இணைத்து, அழகு பார்த்து வரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  இந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா மனைதை ஈசியாக கொள்ளையடித்தார் இந்த சீரியல் நாயகன் சஞ்சீவ். 

காதல் முற்றியதும்  இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றினர். ஆரம்பத்தில் எப்போதும் போல், காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை என மறுத்தாலும், பின் தங்களுடைய காதலை ஒப்புக்கொண்டனர்.

மிக பிரமாண்டமாக நடந்த விருது விழா ஒன்றில், மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள், திருமணத்தை மட்டும் எளிமையாக செய்துகொண்டனர். பின் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்ததை தொடர்ந்து இப்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையே பிறந்து விட்டது.

தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர். இதுவரை குழந்தையின் கைகளை மட்டுமே வெளிக்காட்டிய இந்த தம்பதி முதல் முறையாக, தங்களுடைய அழகிய மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இத்தொடர்ந்து, தன்னுடைய மகளை முதல் முறையாக தூக்கி வைத்துக் கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும், இதில்’என் மகள் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் அவளுக்கான உலகத்தை நான் அமைத்து கொடுப்பேன் என்றும் ஒரு பொறுப்பான தந்தையாக செயல்படுவேன் என்றும் பெருமிதத்தோடு கூறியுள்ளார்.